டூரிங் டாகீஸ் பற்றி பேசும்போது, எனக்கு வேடிக்கையான சம்பவம் ஒன்று ஞாபகதிற்கு வருகிறது. ராமலிங்க மாமாவின் அம்மா சினிமா பார்த்தது கிடையாது, ஆனால் பார்க்கவேண்டும் என்று ரொம்பவும் ஆசை. ஆனால், ராமலிங்க மாமாவிற்கோ சினிமா என்றால் கொஞ்சம்கூட பிடிக்காது. ஆகவே, அவர் அம்மாவின் ஆசை நிறைவேறாமலேயே இருந்தது. அந்த சமயத்தில்,உப்பு கிரௌண்டில் ஒரு டூரிங் டாக்கீஸ் வந்தது. (கி. மு. மாமாவின் தம்பி நாணாதான் அதன் மானேஜர்). ராமலிங்க மாமாவின் அம்மா அவரிடம், “நம்மாத்து வாசல்லேயே கொட்டகை வந்திருக்கிறது. அங்கு என்னைக் கூட்டிக்கொண்டு போகமாட்டாயா?” என்று கேட்டாள். அதற்கு ராமளலிங்க மாமா, ”சரி, வா கூட்டிக்கொண்டு போகிறேன். ஆனால், நான் உள்ளே வரமாட்டேன். உன்னைக் கொண்டு விடுகிறேன். முடியும் போது நான் வந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்”. அம்மாவும் ‘சரி’ என சொல்லவே, அவர் அம்மாவைக்கூட்டிகொண்டு சென்றார். உயர்ந்த கிளாஸ் டிக்கெட் வாங்கி, அம்மாவை சோபாவில் உட்கார்த்திவிட்டு வந்தார். “சினிமா முடிந்தவுடன் நீ இங்கேயே இரு. நான் வந்து கூட்டிக்கொண்டு போகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தார். சினிமா முடிந்தவுடன், அம்மாவை அழைத்து ...
Posts
Showing posts from September, 2021