Posts

Showing posts from June, 2021
  நான் மறக்கமுடியாத ஆசிரியர்கள் என்றால், list பெரியதாகத்தான் இருக்கும். என்றாலும் அவர்களை நினைவு கூர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவதாக இருந்த என் ஆசிரியர் வேங்கடராம சார்தான். பின்பு, ராமுடு சார்! George Middle School-ல் L.ராமலிங்கம் ஐயர்   (HM). ஆங்கில மொழியில் அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தவர். அவருடைய கடைசி காலத்தில் தன் மகனுடன் மைலாப்பூரில் இருந்தார். அந்த இடம் என் வீட்டிற்கு அருகாமையிலிருந்தபடியால்,நான் அவரை அடிக்கடி போய்ப்பார்த்துவிட்டு வருவேன். Middle School, High School ஆன பின்பு, கே.எம்.சுந்தரம் அவர்கள் HM ஆனார். High School ஆனபின்பு, நாங்கள்தான் எஸ்.எஸ்.எல்.சி. முதல் set   ஆகவே எங்களுக்கு ரொம்பவும் அக்கறை எடுத்துக்கொண்டு சொல்லித் தந்தார்! பின்பு, நெல்லை M.D.T. Hindu காலேஜ்! அங்கு ஒவ்வொருவரும் தங்கள் subject-ல் வல்லனராக இருந்தார்கள்; என்றாலும் என் மனதில் பதிந்தவர்கள் இருவர். Alexander Gnanamuthu, Principal. ஆங்கில புலமையில் நிகரற்றவர்! அவர் Shakespeare பாடம் எடுக்கும் போது கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும். மற்றவர் கு. அருணாச்சல கவுண்டர். (தமிழ் பேராசிரியர்)...
  குழந்தைகள் தினத்தன்று கல்கத்தாவில் (மேற்படி படத்தில் உள்ளபடி)   குழந்தைகளுக்காக பிரத்யேகமாக Tram service ஏற்பாடு செய்திருந்தார்கள். இன்று நம் நாட்டில் கல்கத்தாவில் மாத்திரந்தான் Tram service இருக்கிறது என்று நினைக்கிறேன். மேற்படி படத்தை பார்த்த போது, கல்கத்தாவில் அந்த நாட்களில் அதில் சவாரி செய்தது ஞாபகத்திற்கு வருகிறது. காலையில், P.C. ராமைய்யர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, தேசப்ரியா பார்க் ஸ்டாப்பில் ட்ராமை பிடித்து, II class-ல் உட்கார்ந்து Statesman பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பித்து முடிக்கும்போது, நான் இறங்க வேண்டிய (Park Street) ஸ்டாப் வந்துவிடும்! என் மனைவியும், மாலையில் தேசப்ரியா பார்க் ஸ்டாப்பில் ட்ராம் பிடித்து, பவானிப்பூர் ஸ்டாப்பில் இறங்கி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீட்டில் வங்க மொழி வகுப்பிற்கு போவது வழக்கம். ஒரு சமயம், கல்கத்தா வந்திருந்த பேராசிரியர் அ.சீநிவாசராகவன் அவர்கள் நேதாஜி போஸ்   வீட்டிற்கு அழைப்பின்பேரில் வந்தபோது, இவர்களின் வகுப்பிற்கு வந்து மகிழ்ச்சிகரமாக பேசிக்கொண்டிருந்த சம்பவம் என் மனைவியின் நினைவிற்கு வருகிறது!!