குழந்தைகள்
தினத்தன்று கல்கத்தாவில் (மேற்படி படத்தில் உள்ளபடி) குழந்தைகளுக்காக பிரத்யேகமாக Tram service
ஏற்பாடு செய்திருந்தார்கள். இன்று நம் நாட்டில் கல்கத்தாவில் மாத்திரந்தான் Tram
service இருக்கிறது என்று நினைக்கிறேன். மேற்படி படத்தை பார்த்த போது,
கல்கத்தாவில் அந்த நாட்களில் அதில் சவாரி செய்தது ஞாபகத்திற்கு வருகிறது.
காலையில், P.C. ராமைய்யர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, தேசப்ரியா பார்க் ஸ்டாப்பில்
ட்ராமை பிடித்து, II class-ல் உட்கார்ந்து Statesman பேப்பரை பிரித்து படிக்க
ஆரம்பித்து முடிக்கும்போது, நான் இறங்க வேண்டிய (Park Street) ஸ்டாப் வந்துவிடும்!
என் மனைவியும்,
மாலையில் தேசப்ரியா பார்க் ஸ்டாப்பில் ட்ராம் பிடித்து, பவானிப்பூர் ஸ்டாப்பில்
இறங்கி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீட்டில் வங்க மொழி வகுப்பிற்கு போவது
வழக்கம். ஒரு சமயம், கல்கத்தா வந்திருந்த பேராசிரியர் அ.சீநிவாசராகவன் அவர்கள்
நேதாஜி போஸ் வீட்டிற்கு அழைப்பின்பேரில்
வந்தபோது, இவர்களின் வகுப்பிற்கு வந்து மகிழ்ச்சிகரமாக பேசிக்கொண்டிருந்த சம்பவம்
என் மனைவியின் நினைவிற்கு வருகிறது!!
Comments
Post a Comment