நான் மறக்கமுடியாத ஆசிரியர்கள் என்றால், list பெரியதாகத்தான் இருக்கும். என்றாலும் அவர்களை நினைவு கூர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலாவதாக இருந்த என் ஆசிரியர் வேங்கடராம சார்தான். பின்பு, ராமுடு சார்! George Middle School-ல் L.ராமலிங்கம் ஐயர்  (HM). ஆங்கில மொழியில் அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தவர். அவருடைய கடைசி காலத்தில் தன் மகனுடன் மைலாப்பூரில் இருந்தார். அந்த இடம் என் வீட்டிற்கு அருகாமையிலிருந்தபடியால்,நான் அவரை அடிக்கடி போய்ப்பார்த்துவிட்டு வருவேன். Middle School, High School ஆன பின்பு, கே.எம்.சுந்தரம் அவர்கள் HM ஆனார். High School ஆனபின்பு, நாங்கள்தான் எஸ்.எஸ்.எல்.சி. முதல் set  ஆகவே எங்களுக்கு ரொம்பவும் அக்கறை எடுத்துக்கொண்டு சொல்லித் தந்தார்!

பின்பு, நெல்லை M.D.T. Hindu காலேஜ்! அங்கு ஒவ்வொருவரும் தங்கள் subject-ல் வல்லனராக இருந்தார்கள்; என்றாலும் என் மனதில் பதிந்தவர்கள் இருவர். Alexander Gnanamuthu, Principal. ஆங்கில புலமையில் நிகரற்றவர்! அவர் Shakespeare பாடம் எடுக்கும் போது கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும். மற்றவர் கு. அருணாச்சல கவுண்டர். (தமிழ் பேராசிரியர்) இனிமையான குரலுடன் அவர் கம்ப ராமாயண பாடம் எடுக்கும்போது, திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போல இருக்கும்!

பின்பு, மேல் படிப்பு, பம்பாய் மாதுங்காவில் உள்ள R.R. College. சேர்ந்தேன். என் மனதில் நின்ற ஒரு ஆசிரியர் Pro. Bhakta என்றவர். Chemistry பாடம் எடுத்தவர். அவருடன் ரொம்பவும் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது, எப்படியென்றால், நாங்கள் இருவரும் தினம் Vile Parle யிலிருந்து மாதுங்காவிற்கு ட்ரெயினில் சேர்ந்து வருவோம்!

கல்வி நிலையங்களில்லாமல், இன்னமொரு ஆசிரியர் என்றும் என் நினைவில் இருப்பவர், R.N. Ghosh என்பவர். Banga Bhasha Prachaar Samithi –ஐ சேர்ந்தவர். “வர்ணபரிசய்” என்ற ஆனா,ஆவன்னவிலிருந்து எங்களுக்கு வங்க பாஷையை கற்றுத்தந்தவர்.. ரொம்பவும் அன்புடன் எங்களுடன் பழகுவார்.

(இவர்களையெல்லாம் நினைவில் கொண்டு வர ஊன்றுகோலாக இருக்கும் சுந்தரத்திற்கு மிக்க நன்றி!)

Comments

Popular posts from this blog