முதலியப்பபுரம் அய்யா ஸ்வாமிகள் பஜனை மடத்தில் ஆண்டுதோறும் முருகா அகண்டநாமம் வெகு விமரிசையாக நடைபெறும். அகண்டநாமம் முடிந்தபின் அடுத்த தினம் ‘காவடி’ நடைபெறும். பஜனை மடத்திலிருந்து புறப்பட்டு வடக்கே வந்து, பின்பு தங்கமாபுரம் வழியாக நம்ம தெருவிற்கு வரும். சிவன் கோயில் வந்தவுடன் அங்கு காவடியாட்டம் நடைபெறும். கிட்டத்தட்ட அரைமணிநேரம் ஆடியபின், மெதுவாக நகர்ந்து சாமுப்பாவாத்து வாசலில் வந்து நங்கூரம் பாய்ச்சும்! திருச்செந்தூரிலிருந்து முக்காணியன் ஒருவர் வருவார். அவர்தான் இடும்பனாகி காவடி எடுத்து ஆடுவார். இரட்டை நாடி சரீரம் என்றாலும் பக்தி பரவசமாகி ரொம்பவும் சுறுசுறுப்புடன் ஆடுவார்.
ஆம்பூர் கணேசன் என்று ஒருவர் பாடுவார். கணேசன் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றை காவடி ஆட்டத்திற்கு ஏற்றவாறு அழகாகப் பாடுவார். மூன்று ஸ்தாயிகளிலும் மூன்று காலத்திலும்,சந்தம் பிழை இல்லாமல் கோர்வையாக பாடுவார். ஒரு தரம், சாமுப்பாவாத்து வாசலில் ஆட்டம் நடந்தது இன்னமும் என் மனதில் இருக்கிறது. கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டம்! “அதல சேடனாராட’
என்ற திருப்புகழை அவர் பாட, இடும்பன் அதற்கேற்றவாறு ஆட, கண் கொள்ளா காக்ஷியாக இருந்தது. விளம்ப காலத்தில் ஆரம்பிக்க, காவடியும் மெதுவாக ஆட ஆரம்பித்து, மத்யமம், துரிதம், என்ற காலங்களில் கணேசன் பாட அதற்கேற்றவாறு, காவடியாட்டமும் வேகத்தை அதிகரிதுக்கொண்டே போகும்! நாதஸ்வரம், தவில், டோலக் மற்றும் பஞ்சவாத்யங்களில் ஒன்றிரண்டு ஆகியவை கணேசனின் பாட்டுக்கேற்றவாறு முழங்க, குழுமியிருக்கும் எல்லோரும் அப்படியே ஸ்தம்பித்து இருப்பார்கள்.
“வனச மாமியாராட நெடிய மாமனாராட”
என்ற இடம் வந்தவுடன், அதை திரும்பத் திரும்ப பாடி, அடுத்த அடி,
“மயிலுமாடி நீயாடி வரவேணும்”
அதி துரிதத்தில் கணேசன் பாட, இடும்பன் காவடியை தலைக்குமேல் தூக்கியும், முதுகில் சுழற்றியும் அங்குமிங்கும் வேகமாக ஓடியாடி பரவசப்படுத்திவிடுவார். கணேசன் துரிதமாக மேல் ஸ்தாயியில் பாட, பக்தர்கள் மெய்மறந்து “வேல்,வேல்!” என்று கூவ, திருச்செந்தூர் சந்நிதானமே
அங்கு உருவாகிவிடும்!
(பின் ஆண்டுகளில் பித்துக்குளி முருகதாஸ் இதில் கலந்துகொண்டு பாடிவந்தார்)

Narayana Yegnaraman
wrote
ஆம்பூர் கணேசனின் "ஆடவாரீர்
என்னோடவாரீர்..,வேடூவப்பெண்காதலரே ஆடவாரீர் "
என்ற பெ ஹாக் ராகப்பாடல் மாஸ்டர்பீஸ்! குப்பையாண்டிமாமாவாத்து வாசல்லெ பாடிது
இன்றும்காதில் ஒலிப்பதோடு கண்முன்னால் நிற்கிறது.WHATEVER AIYAH HAS
WRITTEN IT IS GREEN IN MY MEMORY.THANKS AIYAH.YOU HAVE BROUGHT OUT VERY NICELY.
AiyahViswamathier wrote
ஆமாம். கணேசனின் "ஆட வாரீர்"
ரொம்பவும் ப்ரசித்தம். அந்த நாட்களில்
இரண்டு கணேசர்கள் இருந்தார்கள். இந்த
ஆம்பூர் கணேசன். மற்றவர் ஊர்காடு கணேசன். இவர் கை தேர்ந்த ம்ருதங்க வித்வான். நம்ம
பஜனை மட கச்சேரிகளிலும் மானேந்தியப்பர் கோவில் கச்சேரிகளிலும் அவர் வாசித்திருக்கிறார். நம்ம தெரு கோமதி
சங்கரனுக்கு இவர்தான் குரு.
Idumban THRUCHANDUR
MADHU
Comments
Post a Comment