முதலியப்பபுரம் தெருவில், சங்கரலிங்க பாகவதர் என்ற வித்வான் இருந்தார். நல்ல வளமான சாரீரம் உடையவர்; மனோதர்மத்துடன், பிருகா சங்கதிகளுடன் நன்றாக பாடுவார். அப்பொழுது இருந்த பிரபலமான ஒரு நாடக கம்பெனியில் சாரங்கதாராஎன்ற நாடகத்திலும் நடித்து வந்தார். (அந்த நாடகத்தில் அவர் நடித்த காக்ஷிகளின் போட்டோக்கள் அவாத்து ரேழியில் மாட்டப்பட்டிருக்கும்!)  ஆல் இந்தியா ரேடியோ திருச்சியில் சீனியர் வித்வான் category-யில் இருந்தார்; அதாவது, ஒரு நாளில் மூன்று slot-ல் அவர் கச்சேரி ஒலிபரப்பாகும். அவர் மூன்று records-ம் கொடுத்துள்ளார். அவர் சிஷ்யர்கள் யாரும் இருந்ததாக தெரியவில்லை. அவருடைய புதல்வர், ராமசுப்ரமணியன் (என் classmate) அவரிடம் கற்றிருந்தான். பின்பு, அவன் வேலை விஷயமாக கல்கத்தா சென்று விட்டான். அங்கு சில பேர்களுக்கு சங்கீதம் சொல்லிக்கொடுத்தான். (அவர்களில் குறிப்பிட வேண்டியவர் கோமள விலாஸ் ராம அய்யரின் மகள்.) பின்பு அவன் இந்தியன் பாங்க் வேலையில் சேர்ந்து மெட்ராஸ் வந்துவிட்டான்.

YN குறிப்பிட்டிருந்தபடி. அய்யா சுவாமிகளின் புதல்வர்கள் பெரிய மொட்டையும் சின்ன மொட்டையும் பஜனை சங்கீதத்தில் முத்திரை பதித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து அஷ்டபதியை அக்ஷர சுத்தத்துடன் இனிமையாக பாடுவார்கள். சின்ன மொட்டை அகால மரணம் அடைந்து விட்டார். பெரிய மொட்டை (அவர் இயற் பெயர் பாலசுப்ரமணியம்) வீட்டிலிருந்தவாறே வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆல் இந்தியா ரேடியோவிலும் அவரது கச்சேரி ஒலிபரப்பாகும்.

முதலியப்பபுரத்தில் ராமு பாகவதர் என்று ஒரு வித்வான் இருந்தார், கதாகாலக்ஷேப விற்பன்னர். அவருடைய மகன் பெயர் ராதாக்ருஷ்ணன்; ராதை என்று அழைக்கப்படுவார். அவர் மெட்ராஸ்க்கு வந்து, எம்.எஸ். சுப்புலக்ஷ்மியிடம் சங்கீதம் பயின்றார். பிறகு, நட்டுவாங்கமும் கற்றுக்கொண்டு குமாரி கமலாவின் நாட்டியங்களுக்கு நட்டுவாங்கம் செய்து வந்தார். கூடவே, அபிநயம், அடவு மற்ற நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு dance master ஆகிவிட்டார். ரிஷி வேலியில் உள்ள JK Foundation-ல் dance master-ஆக வேலை பார்த்து வந்தார். ஓய்வு பெற்ற பின்பு சென்னைக்கு குடிபெயர்த்தார். அவருடைய மகன் ரமேஷ் கைதேர்ந்த ம்ருதங்க வித்வான். ஆல் இந்தியா ரேடியோ சென்னையில் நிலைய வித்வானாக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
Narayana enaraman wrote
Very good write up.RADHAS BROTHER SEETHARAMAN WAS IN THE DRAMA COMPANY OF T.K.SHANMUGAM BROTHERSIN THE DRAMA MANOHARA HE WAS ACTING AS HERO MANOHARAN.AFTER THAT. HE WAS ACTING IN SMALL ROLES IN CINEMA.

Aiyah Viswanathier wrote
Yes, Seetharaman was an actor and was with TKS Brothers and then moved to  films (He belonged to the  age group of my brother, Shankaran and were chums)

Subramanian SG wrote
Sri SankarLingam Bhgavthar was brother of Sri Kurici Krishna iyer who was my Athiimbelr.  Rama Subrama.ian was my room
Mate @ CalcuttA, He was a Natvangar for a dance master and Komala vilas Ramaier daughter was learning dance. My brother  Kulathumani was a tution teacher for Komala vilas son and daughter.

Aiyah Viswanathier wrote
Kurichi Krishna Iyer was popularly known as 'Kuruchi Kittan and Ramalinga Mama literally translated the same as 'Already noted one!;

Subramanian SG wrote
Sankaralingam another was a good singer and used to filim songs and  can imitate T.M.S and Sirkazhi Govindarajan  as very boy.

Hia name was.Muthuswamy. As a  young boy he had good simging voi e
Narayana Yegnaraman wrote
IN MUDALIAPPAPURAM I HAD A CLASSMATE BY NAME S.VAITHI WHO WAS IN LATER DAYS DOING POOJA IN NETTOOR SASTHA KOIL.AIYAH IS HE RELATED TO SANKARALINGAM.
RADHAKRISHNAN INITIALLY SANG FOR KUMARI KAMALS DANCE UNDER VAZHUVOOR RAMIAH PILLAI NATTUVANGAM.THEN HE PROGRESSED AS AIYAH SAID.

Comments

Popular posts from this blog