நம்ம தெருவில் சேஷி அம்மாள் என்ற அம்மையார் இருந்தார்கள். சாமுப்பாவாத்திற்கு தெற்கிற்குத் தெற்கு வீட்டில், அதாவது, சுந்தரத்தின் வீட்டிற்கு வடக்கு வீட்டில் இருந்தார்கள். “செக்கச் செவேல்” என்றிருப்பார்கள். முகத்தில் ஒரு தேஜஸ் இருக்கும். தேவி உபாசகர். தினம்தோறும் காலையில் அவர் தேவி பூஜை செய்வார். மத்யானம் கிட்டத் தட்ட 2 மணிக்கு தேவி பாகவத பாராயணம் நடை பெறும். யாராவது ஒருவர் ஸ்லோகங்கள் வாசிக்க, அதற்கு வியாக்யானம் தருவார்கள். மணி இரண்டு ஆகிவிட்டால், நம்ம கிராமத்து ஸ்திரீகள் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு அவாத்துக்கு வந்துவிடுவார்கள். முதலியப்பபுரம், வீரப்பபுரம் தெருக்களிருந்தும் வருவார்கள். அவாத்து ரேழி பூராவும் கூட்டமாக இருக்கும். ஆண்களும் திண்ணக்கழியில் இருந்துகொண்டு கேட்பார்கள்.
யாராவது வீட்டில் சுப கார்யங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு அவர்களிடம் வந்து, நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்று செல்வார்கள். யாருக்காவது court-ல் ‘ஈரங்கி’ (hearing), இருந்தால், தமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்று அவரிடம் வேண்டிக்கொண்டு செல்வார்கள்.  நாங்களும் (எங்கள் அம்மாவின் ஆக்ஞைபடி) பரீக்ஷை எழுதப் போகும் முன்னால் அவரை நமஸ்காரம் செய்வோம்.  நெற்றியில் விபூதியிட்டு ஆசீர்வாதம் செய்வார்கள். (தேவி பூஜை ஆகியிருந்தால் சுடச்சுட பாயாசமும் கிடைக்கும்!)
அவரின் கணவர் வெளியூரிலிருந்தார். அடிக்கடி வருவார். நல்ல உயரமாக நிமிர்ந்த நடையுடன் இருப்பார். அவருக்கு நீண்ட தாடியுமுண்டு.
அவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு புதல்வருண்டு. அவர் நன்றாக கடம் வாசிப்பார். நம்ம தெரு பஜனையில் கடத்தையும் introduce பண்ணினார்.
(முதலியப்பபுரம் அய்யா சுவாமிகளும் அங்கு பஜனையில் கடம் வாசிக்க அவரை  அழைத்திருக்கிறார்.) ஸ்ரீ ராம அகண்டநாமம், ராதா கல்யாணம் போன்ற உத்சவங்களில் நன்றாக உழைப்பார். ராமலிங்க மாமாவிற்கு வலது கையாக இருந்தார். நாங்கள் அவரை ‘அண்ணா’ என்று அழைப்போம். அவர் எங்களை ‘இஷ்டா!’ என்று கூப்பிடுவார். “இஷ்டா, இங்கு வா!”, “இஷ்டா, எங்க வீட்டிற்குப் போய் கடத்தை எடுத்துண்டு வா!”  என்பார்.
கிருஷ்ணமூர்த்தி அண்ணா ஒரு யோகாசன நிபுணர். நம்ம தெரு ஆற்றங்கரை மணலில் ஒரு யோகாசன வகுப்பை ஆரம்பித்தார். முதலில் நிறையப்பேர் சேர்ந்ததால், “ஜே,ஜே” என்று கலகலப்பாக இருந்தது. நாளாவட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் குறைய, கழுதை தேய்ந்து கட்டஎறும்பான
கதையாகிவிட்டது. ஆனால், நாணாப்பாவாத்து  சுனா சங்கரன் (S.N-ன் தமையனார்) மாத்திரம் விடாமல் கற்று வந்தார். அதன் பலனாக  அவர் நல்ல வலுவுடன் ஸாண்டோ மாதிரி இருப்பார். அவரும் வேலை விஷயமாக பாம்பே சென்றுவிட்டபடியால், கிருஷ்ணமூர்த்தி அண்ணாவின் யோகாசன வகுப்பு மூடப்பட்டது


Subramanian SG wrote

I know that it was manchakani property for MN's mother. Ammaluka house was our own house and I was born in that house in 1936 and it was sold to Sriniva

M.Narayanan's grand mother was staunchest.  divotee of Sheshi Amma . Daily she will visitt 4 to 5 times atleast.



Aiyah Viswanathier wrote

Sankaran was not often seen. As a matter of fact, the house in which Seshi Ammal was staying belonged to MN's family!



Subramanian SG wrote

I know that it was manchakani property for MN's mother. Ammaluka house was our own house and I was born in that house in 1936 and it was sold to Srinivasa iyer

Comments

Popular posts from this blog