“எட்டேகால் என்கிற எண் விசித்ரமானது. அதாவது, அதை தமிழ் எண்ணில் எழுதினால், விபரீதமான பொருளைக் கொடுத்துவிடும். அது எப்படி? தமிழ் எண்படி, எட்டு என்பதை ‘அ’ என்ற எழுத்தும், கால் என்பதை ‘வ’ என்ற எழுத்தும் குறிப்பிடும். அந்த இரண்டையும் சேர்த்தால் ‘அவ’ என்று ஆகிறது. அதை குறிப்பிட்ட பதங்களுடன் சேர்த்தால் எதிர்மறை பொருள் வந்துவிடும்! மானம் என்பது எவ்வளவு உயர்ந்த சொல்; அதன் முன் இந்த ‘அவ’ சேர்ந்தால் ‘அவமானம்’ என்று மானத்தை வாங்கிவிடுகிறது! மரியாதையின் முன் சேர்ந்தால், ‘அவமரியாதையாகி’ மரியாதை கெட்டு விடுகிறது! ‘லக்ஷணத்தின்’ முன் போட்டாலோ, ‘அவலக்ஷணமாகி’ அழகைக் குலைத்துவிடுகிறது! அதனால்தான் ஔவையார் மூர்க்கனைப் பார்த்து, “எட்டேகால் லக்ஷணமே! எமனேறும் வாகனமே!” என்று எள்ளி நகையாடினார்!”
அம்பாசமுத்ரம் தீர்த்தபதி ஹை ஸ்கூலில், ஒரு சமயம்  தமிழ் மூதறிஞர் திரு. ரா.பி. சேது பிள்ளை அவர்கள் ஆற்றிய  சொற்பொழிவிலிருந்து, ஒரு சிறு துளி ஞாபகத்திற்கு வந்தது; எழுதினேன்!




Lakshmi Ramamurti wrote

உங்கள் மனமென்ற சுரங்கத்திலிருந்து வரும் ஒவ்வொரு விஷயங்களும் ஒவ்வொரு வைரக்கல்லை போன்றது.

Comments

Popular posts from this blog