பிரபலமான சங்கித வித்வான்களில் நம்ம சுப்ரமணியபுரம் தெரு வேதாந்த பாகவதர் ஒருவர்.
நல்ல கனமான சாரீரம். (சரீரமும் நல்ல கன காத்ரம்!) முத்துஸ்வாமி தீக்ஷதர் சிஷ்ய பரம்பரையை சேர்ந்தவர்.
அவரும் அவருடைய மைத்துனருமாக சேர்ந்து தீக்ஷதர் கிருதிகளை ஸ்வர, மொழிபெயர்ப்புகளுடன் வெளியிட ஆரம்பித்தார்கள்.
Madras Music Academy 1940 -ல் அவருக்கு "சங்கீத கலாநிதி" பட்டம் கொடுத்து கௌரவித்தார்கள்.
முன்பெல்லாம் மைலாப்பூர் Gokhale Sastri Hall-ல் வைத்து மூன்று நாட்கள் இசை விழா நடைபெறும்.
(தமிழ் நாடு சர்க்கார் நிதி உதவியுடன்) குன்னக்குடி வைத்யநாதன் அதை நடத்தி வைப்பார். கர்நாடக சங்கீதத்தின்
நுணுக்கங்களை ஆராயும் வகையில் சொற்பொழிவுகளும், அதன் பின் கச்சேரியும் அது முடிந்தபின் சாப்பாடும் உண்டு.
ஒரு சொற்பொழிவின்போது வைத்யநாதன் கூறினார், "ராகம், தானம், பல்லவி பாடும் முறையை வழி வகுத்தவர்
கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர். அதற்காக அவர் ஒரு புஸ்தகம் வெளியிட்டுள்ளார்." அதை கேட்டவுடனே எனக்கு
பெருமையாக இருந்தது. (பின்பு, நான் ஊருக்கு வந்தபோது பாகவதர் வீட்டில் போய் அந்த புத்தகத்தை தேடினேன்.
கிடைக்கவில்லை; ஒரு பெரிய எலிதான் என் மேல் விழாமல் ஓடிச் சென்றது!)
அப்பொழுது, அப்துல் கரீம் கான் என்ற ஹிந்துதானி இசை விற்பன்னர் ரொம்பவும் பிரபலமாக இருந்தார். அவர்
கர்நாடகாவில் உள்ள தார்வாரில் இருந்தார். "கிரான கரான" என்ற வழி முறையைச் சேர்ந்தவர். மைசூர் மகாராஜா அவரை ஆஸ்தான வித்வானாக நியமித்திருந்தார். மைசூர் ஆஸ்தானத்தில் அநேகம் கர்நாடக வித்வான்கள் இருந்தபடியால், கானுக்கு
அவர்களிடம் நெருங்கிய பழக்கம் இருந்தது. அவர்தான், ஹம்சத்வனி போன்ற கர்நாடக ராகங்களை ஹிந்துஸ்தானி
இசையில் சேர்த்தார். ஒரு தரம் அவருடைய கச்சேரி மெட்ராஸில் ஏற்பாடு செய்யப் பட்டது. நல்ல கூட்டம். அநேகம்
கர்நாடக சங்கீத வித்வான்களும் வந்திருந்தார்கள். அவர் ஒரு ராக ஆலாபனை செய்து முடித்த உடனே கூட்டத்திலிருந்த
ஒருவர் " ஆஹா, இந்த மாதிரி இங்கு யார் பாடுகிறார்கள்? என்று கூறினார். அங்கு கூட்டத்தில் இருந்த Tiger
வரதாச்சாரியருக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்துவிட்டது. அருகில் அமர்ந்திருந்த வேதாந்த பாகவதரை நோக்கி,
"வேதாந்தம் நீ போய்ப் பாடிக்காட்டு" என்றாராம். வேதாந்த பாகவதரும் ஒரு ராகத்தை கிட்டத் தட்ட ஒரு மணி நேரம்
ஆலாபனை செய்தாராம். அந்த ஹிந்துஸ்தானி வித்வான் அவரைக் கட்டிக்கொண்டு 'ஆஹா! என்ன அற்புதம்!" என்று
பாராட்டினாராம். (இந்த விஷயத்தை ஒரு பிரபல வித்வான் ஒரு TV show-ல் சொன்னார்)
பிற்காலத்தில், அவர் சங்கீத கதா காலக்ஷேபத்திலிறங்கினார். அதிலும் வெற்றிக் கொடி நாட்டினார். அவரைப் பின் பற்றி
பல வித்வான்கள் இந்த துறையில் இறங்கினார்கள்.
அவர் ஒரே ஒரு plate-தான் கொடுத்தார். அதுவும் ஏதோ ஒரு litigation காரணமாக வெளி வரவில்லை.
அந்திம காலத்தில், முதுகில் ஒரு கட்டி வந்து வலி தாங்காமல் சிரமப்பட்டு, குணமாகாமல் அதன் காரணமாக காலமானார்.
(அப்பொழுது 'புற்று நோய்' என்ற வார்த்தை வழக்கில் வந்தாகவில்லை.)
காலமாகவதற்கு முன்பு அவர் சன்யாசம் வாங்கிக்கொண்டார். என்னுடைய தாத்தாவும் அவரும் நெருங்கிய சிநேகிதர்கள்.
அவர் சன்யாசம் வாங்குவதைப் பார்பதற்காக என் தாத்தா என்னை துணைக்கு அழைத்துக்கொண்டு சுப்ரமணியபுரம்
சென்றது என் நினைவிற்கு வருகிறது. பின்பு காலமானவுடன், என் தாத்தா என்னை கூட்டிக்கொண்டு அங்கு ஓடிப்போனதும்
என் ஞாபகத்திற்கு வருகிறது

Comments
Post a Comment