நம்ப கிராமத்தில் வேதாந்த பாகவதர், இராமலிங்க பாகவதர், தவிர, இன்னொரு வித்வான் இருந்தார். அவர் பெயர் சுப்பையா பாகவதர். அவர், சுப்ரமணியபுரம் தெருவில், தெக்குக் கோடி வீட்டிலிருதார். வீணை, பிடில், வாய்ப்பாட்டும் சொல்லிக்கொடுப்பார். என் அக்கா, தாயுவும், நாணாப்பாவாத்து பாப்பா அத்தையும் அவரிடலம் வீணை கற்றார்கள். சர்மாஜியாத்து மூத்த பெண் வள்ளி அவரிடம் பிடில் கற்றுக்கொண்டாள். (பாப்பா அத்தை வீணையும், வள்ளி பிடிலும் வாசிப்பது போல சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று சர்மாஜியாத்தில் இருந்தது) சுப்பையா பாகவதர் தினந்தோறும் மாலையில் வீடு வீடாகச் சென்று பாடம் சொல்லிக்கொடுப்பார். அப்படியும், வரும்படி போதாமல் ப்ராமணார்த்தம் சாப்பிட போவார். (அதை இப்பொழுது நினைத்தாலும் மனதிற்கு வேதனையாக இருக்கிறது)
ஏகாம்பரபுரத்தில், சாத்து மாமாவாத்து லக்ஷம் (லக்ஷ்மிநாராயணன்) நன்றாகப் பாடுவார். நல்ல இனிமையான சாரீரம். நம்ம தெரு பஜனையில் அவர்தான் லீடர். அவர் திருப்புகழ் பாடினால் கேட்டுக்கொண்டேயிருக்கத் தோன்றும். அவருடையக் கச்சேரி ஆல் இந்தியா ரேடியோ திருச்சியில் ஒலிப்பரப்பாகியிருக்கிறது. ஆனால், அவர் சங்கீதத்தை ஒரு profession-ஆக எடுத்துக்கொள்ளவில்லை. வேறு தொழிலை எடுத்துக்கொண்டு சென்னைக்குக் குடி பெயர்த்து விட்டார்.
கோமதி சங்கரன் இன்னொரு வித்வான், ம்ருதங்க நிபுணர். (R. ராமனாத்திற்கு எதிர்த்த வீட்டிலிருந்ததார்). அக்கம்பக்கத்தில் நடக்கும் கச்சேரிகளுக்கு அவரை அழைப்பார்கள். ஸ்ரீ ராம அகண்டநாமத்திற்குப் பின் நடக்கும் கச்சேரிகளில் அவர் வாசிப்பார். அநேகம் அன்பர்கள் சொல்லியும், அவர் ஊரை விட்டு வெளியே போக மறுத்துவிட்டார். ஆல் இந்தியா ரேடியோவில் audition டெஸ்ட் எடுத்தக்கொள்ளவும் மறுத்து விட்டார். அப்பொழுது மட்டும் அவர் மெட்ராஸ் போயிருந்தால், பாலக்காட்டு மணி அய்யர், பழநி சுப்ரமணிய பிள்ளை இவர்கள் rank-ல் இருந்திருப்பார். குடத்தினுள் தீபமாக இருந்துவிட்டார்.
பிள்ளையார் கோவில், பெருமாள் கோவில் பூஜைகளை கவனித்து வந்த ராம பாகவதரும் மிருதங்கம் வாசிப்பார். தாள நிபுணர். எங்களுக்கெல்லாம் தாளம் போடாச் சொல்லித்தருவார்.
Comments
Post a Comment