மஹாகனம் (Rt Hon’ble) V.S.ஸ்ரீனிவாச சாஸ்த்ரிகள் ஒரு மேதை. ஆங்கில
புலமையில் நிகரற்றவர். (ஒரு சமயம் Oxford University-ல் இரு ஆங்கில
professorகளிடையே ஒரு ஆங்கில வார்த்தையை உச்சரிப்பதில் அபிப்ராயபேதம் ஏற்பட்டது
என்றும், அவரில் ஒருவர் “நான் சொல்வதுதான் சரி” என்று ஆணித்தரமாக கூற, மற்றவர்,
“அதற்கு என்ன ஆதாரம்” என்று கேட்க, “ஸ்ரீனிவாச சாஸ்த்ரிகள் இப்படித்தான்
உச்சரிக்கிறார்” என்று முதல்வர் சொல்ல, , மற்றவர் வாயை மூடிக்கொண்டாராம்!)
சாஸ்த்ரிகள் “மீண்டும் வாழ்ந்தால்” என்ற தலைப்பில் தமிழில் ஒரு
புத்தகம் எழிதியுள்ளார். அதை என் அண்ணா, V.சங்கரன் ரொம்பவும் ரசித்துப் படிப்பார்.
அதில் உள்ள விஷயங்களை எனக்கு எடுத்துரைப்பார். சாஸ்த்ரிகள், அந்தப் புத்தகத்தில்
தன வாழ்கையில் சில பகுதிகளைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் என்ற கிராமம். வலங்கைமான் பிராமணத்வத்திற்கு ஒரு எடுத்துக்
காட்டு.
ஒரு அத்யாயத்தில் அங்கு ஆவணியாவிட்டம் அனுஷ்டிப்பதைப் பற்றி விரிவாக
எழுதியுள்ளார். அதிகாலையில் “காமோகார்ஷீத்” ஜபத்திலிருந்து, நதிக்கரையில் உள்ள கல்
மண்டபத்தில் “வேதாரம்பம்”, பின்பு தெருக் கோடியில் உள்ள பிள்ளையார் கோவில் “ஹோமம்”
எல்லாவற்றையும் பற்றி எழயுதிள்ளார். அங்கு எப்படி நடைபெற்றுக்கொண்டிருந்தததோ அதே மாதிரிதான் நம்ம ஏகாம்பரபுரம்
கிராமத்திலும் நடைபெறும். அங்கு, காவேரி
நதி, இங்கு தாம்பிரபரணி அவ்வளவுதான் வித்தியாசம்.
சாஸ்த்ரிகள் எழுதுகிறார். “எனக்கு மறு ஜென்மம் கிடைத்து “மீண்டும்
வாழ்ந்தால்”, அது வலங்கைமாநில்தான் வேண்டும்”, எனக்கும் அதே மாதிரிதான் ஆசை! நானும் மறுஜென்மம்
எடுத்து மீண்டும் வாழ்ந்தால், அது ஏகாம்பரபுரம் கிராமத்தில் தான் இருக்கவேண்டும்.
அந்த ஆசை நிறைவேறுமா, நிறைவேறாதா? எவரால் சொல்லமுடியும்? “கண்டவர் விண்டிலர்,
விண்டவர் கண்டிலர்!”
(சாஸ்த்ரிகள் எழதிய ‘மீண்டும் வாழ்ந்தால் “ புத்தகம் நம்ம “கிராம
நண்பன்” வாசகசாலையில் இருந்தது.)
Very nice blog
ReplyDelete