டூரிங் டாகீஸ் பற்றி பேசும்போது, எனக்கு வேடிக்கையான சம்பவம் ஒன்று ஞாபகதிற்கு வருகிறது. ராமலிங்க மாமாவின் அம்மா சினிமா பார்த்தது கிடையாது, ஆனால் பார்க்கவேண்டும் என்று ரொம்பவும் ஆசை. ஆனால், ராமலிங்க மாமாவிற்கோ சினிமா என்றால் கொஞ்சம்கூட பிடிக்காது. ஆகவே, அவர் அம்மாவின் ஆசை நிறைவேறாமலேயே இருந்தது. அந்த சமயத்தில்,உப்பு கிரௌண்டில் ஒரு டூரிங் டாக்கீஸ் வந்தது. (கி. மு. மாமாவின் தம்பி நாணாதான் அதன் மானேஜர்). ராமலிங்க மாமாவின் அம்மா அவரிடம், “நம்மாத்து வாசல்லேயே கொட்டகை வந்திருக்கிறது. அங்கு என்னைக் கூட்டிக்கொண்டு போகமாட்டாயா?” என்று கேட்டாள். அதற்கு ராமளலிங்க மாமா, ”சரி, வா கூட்டிக்கொண்டு போகிறேன். ஆனால், நான் உள்ளே வரமாட்டேன். உன்னைக் கொண்டு விடுகிறேன். முடியும் போது நான் வந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்”. அம்மாவும் ‘சரி’ என சொல்லவே, அவர் அம்மாவைக்கூட்டிகொண்டு சென்றார். உயர்ந்த கிளாஸ் டிக்கெட் வாங்கி, அம்மாவை சோபாவில் உட்கார்த்திவிட்டு வந்தார். “சினிமா முடிந்தவுடன் நீ இங்கேயே இரு. நான் வந்து கூட்டிக்கொண்டு போகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தார். சினிமா முடிந்தவுடன், அம்மாவை அழைத்து ...
Posts
- Get link
- X
- Other Apps
நான் மறக்கமுடியாத ஆசிரியர்கள் என்றால், list பெரியதாகத்தான் இருக்கும். என்றாலும் அவர்களை நினைவு கூர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவதாக இருந்த என் ஆசிரியர் வேங்கடராம சார்தான். பின்பு, ராமுடு சார்! George Middle School-ல் L.ராமலிங்கம் ஐயர் (HM). ஆங்கில மொழியில் அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தவர். அவருடைய கடைசி காலத்தில் தன் மகனுடன் மைலாப்பூரில் இருந்தார். அந்த இடம் என் வீட்டிற்கு அருகாமையிலிருந்தபடியால்,நான் அவரை அடிக்கடி போய்ப்பார்த்துவிட்டு வருவேன். Middle School, High School ஆன பின்பு, கே.எம்.சுந்தரம் அவர்கள் HM ஆனார். High School ஆனபின்பு, நாங்கள்தான் எஸ்.எஸ்.எல்.சி. முதல் set ஆகவே எங்களுக்கு ரொம்பவும் அக்கறை எடுத்துக்கொண்டு சொல்லித் தந்தார்! பின்பு, நெல்லை M.D.T. Hindu காலேஜ்! அங்கு ஒவ்வொருவரும் தங்கள் subject-ல் வல்லனராக இருந்தார்கள்; என்றாலும் என் மனதில் பதிந்தவர்கள் இருவர். Alexander Gnanamuthu, Principal. ஆங்கில புலமையில் நிகரற்றவர்! அவர் Shakespeare பாடம் எடுக்கும் போது கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும். மற்றவர் கு. அருணாச்சல கவுண்டர். (தமிழ் பேராசிரியர்)...
- Get link
- X
- Other Apps
குழந்தைகள் தினத்தன்று கல்கத்தாவில் (மேற்படி படத்தில் உள்ளபடி) குழந்தைகளுக்காக பிரத்யேகமாக Tram service ஏற்பாடு செய்திருந்தார்கள். இன்று நம் நாட்டில் கல்கத்தாவில் மாத்திரந்தான் Tram service இருக்கிறது என்று நினைக்கிறேன். மேற்படி படத்தை பார்த்த போது, கல்கத்தாவில் அந்த நாட்களில் அதில் சவாரி செய்தது ஞாபகத்திற்கு வருகிறது. காலையில், P.C. ராமைய்யர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, தேசப்ரியா பார்க் ஸ்டாப்பில் ட்ராமை பிடித்து, II class-ல் உட்கார்ந்து Statesman பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பித்து முடிக்கும்போது, நான் இறங்க வேண்டிய (Park Street) ஸ்டாப் வந்துவிடும்! என் மனைவியும், மாலையில் தேசப்ரியா பார்க் ஸ்டாப்பில் ட்ராம் பிடித்து, பவானிப்பூர் ஸ்டாப்பில் இறங்கி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீட்டில் வங்க மொழி வகுப்பிற்கு போவது வழக்கம். ஒரு சமயம், கல்கத்தா வந்திருந்த பேராசிரியர் அ.சீநிவாசராகவன் அவர்கள் நேதாஜி போஸ் வீட்டிற்கு அழைப்பின்பேரில் வந்தபோது, இவர்களின் வகுப்பிற்கு வந்து மகிழ்ச்சிகரமாக பேசிக்கொண்டிருந்த சம்பவம் என் மனைவியின் நினைவிற்கு வருகிறது!!
- Get link
- X
- Other Apps
பிரபலமான சங்கித வித்வான்களில் நம்ம சுப்ரமணியபுரம் தெரு வேதாந்த பாகவதர் ஒருவர். நல்ல கனமான சாரீரம். (சரீரமும் நல்ல கன காத்ரம்!) முத்துஸ்வாமி தீக்ஷதர் சிஷ்ய பரம்பரையை சேர்ந்தவர். அவரும் அவருடைய மைத்துனருமாக சேர்ந்து தீக்ஷதர் கிருதிகளை ஸ்வர, மொழிபெயர்ப்புகளுடன் வெளியிட ஆரம்பித்தார்கள். Madras Music Academy 1940 -ல் அவருக்கு "சங்கீத கலாநிதி" பட்டம் கொடுத்து கௌரவித்தார்கள். முன்பெல்லாம் மைலாப்பூர் Gokhale Sastri Hall-ல் வைத்து மூன்று நாட்கள் இசை விழா நடைபெறும். (தமிழ் நாடு சர்க்கார் நிதி உதவியுடன்) குன்னக்குடி வைத்யநாதன் அதை நடத்தி வைப்பார். கர்நாடக சங்கீதத்தின் நுணுக்கங்களை ஆராயும் வகையில் சொற்பொழிவுகளும், அதன் பின் கச்சேரியும் அது முடிந்தபின் சாப்பாடும் உண்டு. ஒரு சொற்பொழிவின்போது வைத்யநாதன் கூறினார், "ராகம், தானம், பல்லவி பாடும் முறையை வழி வகுத்தவர் கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர். அதற்காக அவர் ஒரு புஸ்தகம் வெளியிட்டுள்ளார்." அதை கேட்டவுடனே எனக்கு பெருமையாக இருந்தது. (பின்பு, நான் ஊருக்கு வந்தபோது பாகவதர் வீட்டில் போய் அந்த...
- Get link
- X
- Other Apps
முதலியப்பபுரம் தெருவில் , சங்கரலிங்க பாகவதர் என்ற வித்வான் இருந்தார். நல்ல வளமான சாரீரம் உடையவர் ; மனோதர்மத்துடன் , பிருகா சங்கதிகளுடன் நன்றாக பாடுவார். அப்பொழுது இருந்த பிரபலமான ஒரு நாடக கம்பெனியில் “ சாரங்கதாரா ” என்ற நாடகத்திலும் நடித்து வந்தார். (அந்த நாடகத்தில் அவர் நடித்த காக்ஷிகளின் போட்டோக்கள் அவாத்து ரேழியில் மாட்டப்பட்டிருக்கும்!) ஆல் இந்தியா ரேடியோ திருச்சியில் சீனியர் வித்வான் category- யில் இருந்தார் ; அதாவது , ஒரு நாளில் மூன்று slot- ல் அவர் கச்சேரி ஒலிபரப்பாகும். அவர் மூன்று records- ம் கொடுத்துள்ளார். அவர் சிஷ்யர்கள் யாரும் இருந்ததாக தெரியவில்லை. அவருடைய புதல்வர் , ராமசுப்ரமணியன் (என் classmate) அவரிடம் கற்றிருந்தான். பின்பு , அவன் வேலை விஷயமாக கல்கத்தா சென்று விட்டான். அங்கு சில பேர்களுக்கு சங்கீதம் சொல்லிக்கொடுத்தான். (அவர்களில் குறிப்பிட வேண்டியவர் கோமள விலாஸ் ராம அய்யரின் மகள்.) பின்பு அவன் இந்தியன் பாங்க் வேலையில் சேர்ந்து மெட்ராஸ் வந்துவிட்டான். YN குறிப்பிட்டிருந்தபடி. அய்யா சுவாமிகளின் புதல்வர்கள் பெரிய மொட்டையும் சின்ன மொட்டையும் பஜனை சங்கீதத்தில...
- Get link
- X
- Other Apps
நம்ப கிராமத்தில் வேதாந்த பாகவதர், இராமலிங்க பாகவதர், தவிர, இன்னொரு வித்வான் இருந்தார். அவர் பெயர் சுப்பையா பாகவதர். அவர், சுப்ரமணியபுரம் தெருவில், தெக்குக் கோடி வீட்டிலிருதார். வீணை, பிடில், வாய்ப்பாட்டும் சொல்லிக்கொடுப்பார். என் அக்கா, தாயுவும், நாணாப்பாவாத்து பாப்பா அத்தையும் அவரிடலம் வீணை கற்றார்கள். சர்மாஜியாத்து மூத்த பெண் வள்ளி அவரிடம் பிடில் கற்றுக்கொண்டாள். (பாப்பா அத்தை வீணையும், வள்ளி பிடிலும் வாசிப்பது போல சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று சர்மாஜியாத்தில் இருந்தது) சுப்பையா பாகவதர் தினந்தோறும் மாலையில் வீடு வீடாகச் சென்று பாடம் சொல்லிக்கொடுப்பார். அப்படியும், வரும்படி போதாமல் ப்ராமணார்த்தம் சாப்பிட போவார். (அதை இப்பொழுது நினைத்தாலும் மனதிற்கு வேதனையாக இருக்கிறது) ஏகாம்பரபுரத்தில், சாத்து மாமாவாத்து லக்ஷம் (லக்ஷ்மிநாராயணன்) நன்றாகப் பாடுவார். நல்ல இனிமையான சாரீரம். நம்ம தெரு பஜனையில் அவர்தான் லீடர். அவர் திருப்புகழ் பாடினால் கேட்டுக்கொண்டேயிருக்கத் தோன்றும். அவருடையக் கச்சேரி ஆல் இந்தியா ரேடியோ திருச்சியில் ஒலிப்பரப்பாகியிருக்கிறது. ஆனால், அவர் சங்கீதத்தை ஒரு profession-...
- Get link
- X
- Other Apps
முதலியப்பபுரம் அய்யா ஸ்வாமிகள் பஜனை மடத்தில் ஆண்டுதோறும் முருகா அகண்டநாமம் வெகு விமரிசையாக நடைபெறும். அகண்டநாமம் முடிந்தபின் அடுத்த தினம் ‘காவடி’ நடைபெறும். பஜனை மடத்திலிருந்து புறப்பட்டு வடக்கே வந்து, பின்பு தங்கமாபுரம் வழியாக நம்ம தெருவிற்கு வரும். சிவன் கோயில் வந்தவுடன் அங்கு காவடியாட்டம் நடைபெறும். கிட்டத்தட்ட அரைமணிநேரம் ஆடியபின், மெதுவாக நகர்ந்து சாமுப்பாவாத்து வாசலில் வந்து நங்கூரம் பாய்ச்சும்! திருச்செந்தூரிலிருந்து முக்காணியன் ஒருவர் வருவார். அவர்தான் இடும்பனாகி காவடி எடுத்து ஆடுவார். இரட்டை நாடி சரீரம் என்றாலும் பக்தி பரவசமாகி ரொம்பவும் சுறுசுறுப்புடன் ஆடுவார். ஆம்பூர் கணேசன் என்று ஒருவர் பாடுவார். கணேசன் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றை காவடி ஆட்டத்திற்கு ஏற்றவாறு அழகாகப் பாடுவார். மூன்று ஸ்தாயிகளிலும் மூன்று காலத்திலும்,சந்தம் பிழை இல்லாமல் கோர்வையாக பாடுவார். ஒரு தரம், சாமுப்பாவாத்து வாசலில் ஆட்டம் நடந்தது இன்னமும் என் மனதில் இருக்கிறது. கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டம்! “அதல சேடனாராட’ என்ற திருப்புகழை அவர் பாட, இடும்பன் அதற்க...