பிரபலமான சங்கித வித்வான்களில் நம்ம சுப்ரமணியபுரம் தெரு வேதாந்த பாகவதர் ஒருவர். நல்ல கனமான சாரீரம். (சரீரமும் நல்ல கன காத்ரம்!) முத்துஸ்வாமி தீக்ஷதர் சிஷ்ய பரம்பரையை சேர்ந்தவர். அவரும் அவருடைய மைத்துனருமாக சேர்ந்து தீக்ஷதர் கிருதிகளை ஸ்வர, மொழிபெயர்ப்புகளுடன் வெளியிட ஆரம்பித்தார்கள். Madras Music Academy 1940 -ல் அவருக்கு "சங்கீத கலாநிதி" பட்டம் கொடுத்து கௌரவித்தார்கள். முன்பெல்லாம் மைலாப்பூர் Gokhale Sastri Hall-ல் வைத்து மூன்று நாட்கள் இசை விழா நடைபெறும். (தமிழ் நாடு சர்க்கார் நிதி உதவியுடன்) குன்னக்குடி வைத்யநாதன் அதை நடத்தி வைப்பார். கர்நாடக சங்கீதத்தின் நுணுக்கங்களை ஆராயும் வகையில் சொற்பொழிவுகளும், அதன் பின் கச்சேரியும் அது முடிந்தபின் சாப்பாடும் உண்டு. ஒரு சொற்பொழிவின்போது வைத்யநாதன் கூறினார், "ராகம், தானம், பல்லவி பாடும் முறையை வழி வகுத்தவர் கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர். அதற்காக அவர் ஒரு புஸ்தகம் வெளியிட்டுள்ளார்." அதை கேட்டவுடனே எனக்கு பெருமையாக இருந்தது. (பின்பு, நான் ஊருக்கு வந்தபோது பாகவதர் வீட்டில் போய் அந்த...
Posts
Showing posts from August, 2019
- Get link
- X
- Other Apps
முதலியப்பபுரம் தெருவில் , சங்கரலிங்க பாகவதர் என்ற வித்வான் இருந்தார். நல்ல வளமான சாரீரம் உடையவர் ; மனோதர்மத்துடன் , பிருகா சங்கதிகளுடன் நன்றாக பாடுவார். அப்பொழுது இருந்த பிரபலமான ஒரு நாடக கம்பெனியில் “ சாரங்கதாரா ” என்ற நாடகத்திலும் நடித்து வந்தார். (அந்த நாடகத்தில் அவர் நடித்த காக்ஷிகளின் போட்டோக்கள் அவாத்து ரேழியில் மாட்டப்பட்டிருக்கும்!) ஆல் இந்தியா ரேடியோ திருச்சியில் சீனியர் வித்வான் category- யில் இருந்தார் ; அதாவது , ஒரு நாளில் மூன்று slot- ல் அவர் கச்சேரி ஒலிபரப்பாகும். அவர் மூன்று records- ம் கொடுத்துள்ளார். அவர் சிஷ்யர்கள் யாரும் இருந்ததாக தெரியவில்லை. அவருடைய புதல்வர் , ராமசுப்ரமணியன் (என் classmate) அவரிடம் கற்றிருந்தான். பின்பு , அவன் வேலை விஷயமாக கல்கத்தா சென்று விட்டான். அங்கு சில பேர்களுக்கு சங்கீதம் சொல்லிக்கொடுத்தான். (அவர்களில் குறிப்பிட வேண்டியவர் கோமள விலாஸ் ராம அய்யரின் மகள்.) பின்பு அவன் இந்தியன் பாங்க் வேலையில் சேர்ந்து மெட்ராஸ் வந்துவிட்டான். YN குறிப்பிட்டிருந்தபடி. அய்யா சுவாமிகளின் புதல்வர்கள் பெரிய மொட்டையும் சின்ன மொட்டையும் பஜனை சங்கீதத்தில...
- Get link
- X
- Other Apps
நம்ப கிராமத்தில் வேதாந்த பாகவதர், இராமலிங்க பாகவதர், தவிர, இன்னொரு வித்வான் இருந்தார். அவர் பெயர் சுப்பையா பாகவதர். அவர், சுப்ரமணியபுரம் தெருவில், தெக்குக் கோடி வீட்டிலிருதார். வீணை, பிடில், வாய்ப்பாட்டும் சொல்லிக்கொடுப்பார். என் அக்கா, தாயுவும், நாணாப்பாவாத்து பாப்பா அத்தையும் அவரிடலம் வீணை கற்றார்கள். சர்மாஜியாத்து மூத்த பெண் வள்ளி அவரிடம் பிடில் கற்றுக்கொண்டாள். (பாப்பா அத்தை வீணையும், வள்ளி பிடிலும் வாசிப்பது போல சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று சர்மாஜியாத்தில் இருந்தது) சுப்பையா பாகவதர் தினந்தோறும் மாலையில் வீடு வீடாகச் சென்று பாடம் சொல்லிக்கொடுப்பார். அப்படியும், வரும்படி போதாமல் ப்ராமணார்த்தம் சாப்பிட போவார். (அதை இப்பொழுது நினைத்தாலும் மனதிற்கு வேதனையாக இருக்கிறது) ஏகாம்பரபுரத்தில், சாத்து மாமாவாத்து லக்ஷம் (லக்ஷ்மிநாராயணன்) நன்றாகப் பாடுவார். நல்ல இனிமையான சாரீரம். நம்ம தெரு பஜனையில் அவர்தான் லீடர். அவர் திருப்புகழ் பாடினால் கேட்டுக்கொண்டேயிருக்கத் தோன்றும். அவருடையக் கச்சேரி ஆல் இந்தியா ரேடியோ திருச்சியில் ஒலிப்பரப்பாகியிருக்கிறது. ஆனால், அவர் சங்கீதத்தை ஒரு profession-...
- Get link
- X
- Other Apps
முதலியப்பபுரம் அய்யா ஸ்வாமிகள் பஜனை மடத்தில் ஆண்டுதோறும் முருகா அகண்டநாமம் வெகு விமரிசையாக நடைபெறும். அகண்டநாமம் முடிந்தபின் அடுத்த தினம் ‘காவடி’ நடைபெறும். பஜனை மடத்திலிருந்து புறப்பட்டு வடக்கே வந்து, பின்பு தங்கமாபுரம் வழியாக நம்ம தெருவிற்கு வரும். சிவன் கோயில் வந்தவுடன் அங்கு காவடியாட்டம் நடைபெறும். கிட்டத்தட்ட அரைமணிநேரம் ஆடியபின், மெதுவாக நகர்ந்து சாமுப்பாவாத்து வாசலில் வந்து நங்கூரம் பாய்ச்சும்! திருச்செந்தூரிலிருந்து முக்காணியன் ஒருவர் வருவார். அவர்தான் இடும்பனாகி காவடி எடுத்து ஆடுவார். இரட்டை நாடி சரீரம் என்றாலும் பக்தி பரவசமாகி ரொம்பவும் சுறுசுறுப்புடன் ஆடுவார். ஆம்பூர் கணேசன் என்று ஒருவர் பாடுவார். கணேசன் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றை காவடி ஆட்டத்திற்கு ஏற்றவாறு அழகாகப் பாடுவார். மூன்று ஸ்தாயிகளிலும் மூன்று காலத்திலும்,சந்தம் பிழை இல்லாமல் கோர்வையாக பாடுவார். ஒரு தரம், சாமுப்பாவாத்து வாசலில் ஆட்டம் நடந்தது இன்னமும் என் மனதில் இருக்கிறது. கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டம்! “அதல சேடனாராட’ என்ற திருப்புகழை அவர் பாட, இடும்பன் அதற்க...
- Get link
- X
- Other Apps
“எட்டேகால் என்கிற எண் விசித்ரமானது. அதாவது, அதை தமிழ் எண்ணில் எழுதினால், விபரீதமான பொருளைக் கொடுத்துவிடும். அது எப்படி? தமிழ் எண்படி, எட்டு என்பதை ‘அ’ என்ற எழுத்தும், கால் என்பதை ‘வ’ என்ற எழுத்தும் குறிப்பிடும். அந்த இரண்டையும் சேர்த்தால் ‘அவ’ என்று ஆகிறது. அதை குறிப்பிட்ட பதங்களுடன் சேர்த்தால் எதிர்மறை பொருள் வந்துவிடும்! மானம் என்பது எவ்வளவு உயர்ந்த சொல்; அதன் முன் இந்த ‘அவ’ சேர்ந்தால் ‘அவமானம்’ என்று மானத்தை வாங்கிவிடுகிறது! மரியாதையின் முன் சேர்ந்தால், ‘அவமரியாதையாகி’ மரியாதை கெட்டு விடுகிறது! ‘லக்ஷணத்தின்’ முன் போட்டாலோ, ‘அவலக்ஷணமாகி’ அழகைக் குலைத்துவிடுகிறது! அதனால்தான் ஔவையார் மூர்க்கனைப் பார்த்து, “எட்டேகால் லக்ஷணமே! எமனேறும் வாகனமே!” என்று எள்ளி நகையாடினார்!” அம்பாசமுத்ரம் தீர்த்தபதி ஹை ஸ்கூலில், ஒரு சமயம் தமிழ் மூதறிஞர் திரு. ரா.பி. சேது பிள்ளை அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து, ஒரு சிறு துளி ஞாபகத்திற்கு வந்தது; எழுதினேன்! Lakshmi Ramamurti wrote உங்கள் மனமென்ற சுரங்கத்திலிருந்து வரும் ஒவ்வொரு விஷயங்களும் ஒவ்வொரு வைரக்கல்லை போன்றது.
- Get link
- X
- Other Apps
நம்ம தெருவில் சேஷி அம்மாள் என்ற அம்மையார் இருந்தார்கள். சாமுப்பாவாத்திற்கு தெற்கிற்குத் தெற்கு வீட்டில், அதாவது, சுந்தரத்தின் வீட்டிற்கு வடக்கு வீட்டில் இருந்தார்கள். “செக்கச் செவேல்” என்றிருப்பார்கள். முகத்தில் ஒரு தேஜஸ் இருக்கும். தேவி உபாசகர். தினம்தோறும் காலையில் அவர் தேவி பூஜை செய்வார். மத்யானம் கிட்டத் தட்ட 2 மணிக்கு தேவி பாகவத பாராயணம் நடை பெறும். யாராவது ஒருவர் ஸ்லோகங்கள் வாசிக்க, அதற்கு வியாக்யானம் தருவார்கள். மணி இரண்டு ஆகிவிட்டால், நம்ம கிராமத்து ஸ்திரீகள் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு அவாத்துக்கு வந்துவிடுவார்கள். முதலியப்பபுரம், வீரப்பபுரம் தெருக்களிருந்தும் வருவார்கள். அவாத்து ரேழி பூராவும் கூட்டமாக இருக்கும். ஆண்களும் திண்ணக்கழியில் இருந்துகொண்டு கேட்பார்கள். யாராவது வீட்டில் சுப கார்யங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு அவர்களிடம் வந்து, நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்று செல்வார்கள். யாருக்காவது court-ல் ‘ஈரங்கி’ (hearing), இருந்தால், தமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்று அவரிடம் வேண்டிக்கொண்டு செல்வார்கள். நாங்களும் (எங்கள் அம்மாவின் ஆக்ஞைபடி) பரீக்ஷை எழுதப் போகும் முன்னா...
- Get link
- X
- Other Apps
மஹாகனம் (Rt Hon’ble) V. S. ஸ்ரீனிவாச சாஸ்த்ரிகள் ஒரு மேதை. ஆங்கில புலமையில் நிகரற்றவர். (ஒரு சமயம் Oxford University-ல் இரு ஆங்கில professorகளிடையே ஒரு ஆங்கில வார்த்தையை உச்சரிப்பதில் அபிப்ராயபேதம் ஏற்பட்டது என்றும், அவரில் ஒருவர் “நான் சொல்வதுதான் சரி” என்று ஆணித்தரமாக கூற, மற்றவர், “அதற்கு என்ன ஆதாரம்” என்று கேட்க, “ஸ்ரீனிவாச சாஸ்த்ரிகள் இப்படித்தான் உச்சரிக்கிறார்” என்று முதல்வர் சொல்ல, , மற்றவர் வாயை மூடிக்கொண்டாராம்! ) சாஸ்த்ரிகள் “மீண்டும் வாழ்ந்தால்” என்ற தலைப்பில் தமிழில் ஒரு புத்தகம் எழிதியுள்ளார். அதை என் அண்ணா, V.சங்கரன் ரொம்பவும் ரசித்துப் படிப்பார். அதில் உள்ள விஷயங்களை எனக்கு எடுத்துரைப்பார். சாஸ்த்ரிகள், அந்தப் புத்தகத்தில் தன வாழ்கையில் சில பகுதிகளைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் என்ற கிராமம். வலங்கைமான் பிராமணத்வத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. ஒரு அத்யாயத்தில் அங்கு ஆவணியாவிட்டம் அனுஷ்டிப்பதைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதிகாலையில் “காமோகார்ஷீத்” ஜபத்திலிருந்து, நதிக்கரையில் உள்ள கல் மண்டபத்தில் “...